இந்தியா

சுகாதாரத்துறை வரவேற்புடன் பெங்களூரு வந்தடைந்த சூப்பர் ஸ்டார்...

பெங்களூருவிற்கு விமானம் மூலம் வந்தடைந்த நடிகர் ரஜினிகாந்தை, கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் மலர்கொத்து கொடுத்து வரவேற்றார்.

Malaimurasu Seithigal TV

நடிகர் புனித் குமார் மறைந்து ஓராண்டு காலம் கடந்ததை அடுத்து, அவரை நினைவு கோரவும், அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், கர்நாடக அரசு, அவருக்கு விருது வழங்குகிறது. சினிமா மற்றும் அரசியலில், மறைந்த புனீத் குமாரின் அற்பணிப்பை கவுரவிக்கும் வகையில், அவருக்கு, மாநிலத்தின் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றான “கர்நாடக ரத்னா விருது” வழங்க இருக்கிறது, கர்நாடக அரசு.

இன்று மாலை 4 மணியளவில், கன்னட ராஜயோத்சவத்துடன் இணைந்து கொண்டாடப்பட இருக்கும் இந்நிகழ்ச்சியில் பல பெரும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். கன்னட திரையுலகம் மட்டுமின்றி, ஆர்.ஆர்.ஆர் படம் புகழ், தெலுங்கு நடிகர் ஜூனியர் எ.டி.ஆர் உட்பட தென்னிந்திய திரையுலகின் மிகப்பெரும் நட்சத்திரங்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் கூறப்படும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கிறார்.

இதற்காக, தனி விமானம் மூலமாக பெங்களூரு வந்தடைந்திருக்கிறார். அப்போது அவரை கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் நேரில் சென்று வரவேற்றார். மலர்களும், “ஏ ஹிமாலயன் மாஸ்டர்” என்ற புத்தகமும் வழங்கி வரவேற்றதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார் ரஜினிகாந்த்.

நடிகர் மட்டுமின்றி தற்போது அரசியலிலும் தனக்கென்று ஒரு இடம் உருவாக்கி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமாரும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவருக்கான கவுரவ விருது வழங்கும் விழாவில் அவர் கலந்து கொண்டது, கன்னட சினிமா ரசிகர்களுக்கு மட்டுமின்றி தென்னிந்திய திரையுலக ரசிகர்களுக்கும் நெகிழ்ச்சி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.