இந்தியா

தேர் சரிந்து விழுந்ததால், திருவிழாவில் பதற்றம்... அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை...

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் தேர் சரிந்து விபத்து அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் உயிர் தப்பினர். இச்சம்பவம் பக்தர்களுக்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள வீரபத்திரேஸ்வரா கோவில் ஆண்டு தேர் திருவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்த திருவிழா கொண்டாடப்படுவதால் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த சுமார் 800 பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர்விழாவின் இறுதியாக கோவில் தேர் பக்தர்களால் இழுக்கப்பட்டது.

கோவிலை சுற்றி தேர் வந்து கொண்டிருந்தபோது திடீரென தேர் கோவில் மீது சரிந்தது. அதை சீர் செய்ய பக்தர்கள் முயற்சித்த போது தேர் முறிந்து முழுவதுமாக நிலத்தில் சாய்ந்தது.

தேர் கவிழப் போவதை பக்தர்கள் முன்கூட்டியே அறிந்த காரணத்தினால் அனைவரும் தூர நின்று கொண்டனர் இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.