இந்தியா

‘போட்’ விடும் அவல நிலை; வெள்ளத்தில் மூழ்கிய பெங்களூரு!!!

கனமழை காரணமாக பெங்களூரு வெள்ளத்தில் மூழ்கிய வண்ணம் உள்ளது. இதனால், பல இடங்களில் படகுகள் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Malaimurasu Seithigal TV

எப்போதும் குளு குளுவென இருக்கும் கர்நாடக தலைநகர் பெங்களூரு, தற்போது, எப்போதும் காணாத கனமழையால், வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 6 மணி அளவில் தொடங்கி இரவு 11 மணி வரை கனமழை 5 மணி நேரம் நிற்காமல் கொட்டி தீர்த்தது. இதனால் பெங்களூரு நகரில் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

கே ஆர் புரம், எலகங்கா, சிவாஜி நகர், பனசங்கரி, இந்திரா நகர், ஜெய நகர் என பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல பகுதிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. நூற்றுக்கணக்கான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், வெள்ள நீரில் சேதம் அடைந்தன.

வீடுகளுக்குள் மழை நீர் சூழ்ந்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை திருமண சுபமுகூர்த்த தினம் என்பதால் திருமணங்களில் பங்கேற்க பொதுமக்கள் பெரும்பாலோனோர் வெளியே வந்திருந்த நிலையில் கனமழையால் சாலையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி வீட்டிற்கு திரும்ப முடியாமல் இன்னலை சந்தித்தனர். கனமழையின் காரணமாக நகர் முழுவதும் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து பல பகுதிகளில், இன்ஃப்ளேட்டபிள் போட்டுகள் விடப்பட்டுள்ளன. மேலும், விமான நிலையத்திலும், தண்ணீர் நிரம்பி வழிந்து காணப்பட்டுள்ளது. ஒரு சில பகுதிகளில், தண்ணீர் தேக்கம் அதிகமாக இருந்ததால், போக்குவரத்து நெரிசல் பல மணி நெரமாக நீடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நேற்று மட்டுமே, பல லட்சம் மதிப்பில், நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பல நிர்வாகங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.