இந்தியா

அயோத்தியில் ரயிலை கவிழ்க்க சதி திட்டம் - உத்தரபிரதேசத்தில் பரபரப்பு

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ரயிலை கவிழ்க்க செய்யப்பட்ட சதி தகுந்த நேரத்தில் முறியடிக்கப்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ரயிலை கவிழ்க்க செய்யப்பட்ட சதி தகுந்த நேரத்தில் முறியடிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் குடியரசு தின விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி - ஆச்சார்யா நரேந்திரதேவ் நகர் இடையேயான ரயில் பாதையில் தண்டளத்தின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

ரயில் தண்டவாளத்தின் வழக்கமாக பரிசோதனையின்போது இது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து துரிதமாக செயல்பட்ட அதிகாரிகள் ரயில் பாதையை உடனடியாக சீரமைத்து பெரும் விபத்து தடுத்து நிறுத்தினர். இச்சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.