27 ஆண்டுகால இல்லற வாழ்க்கையை முடித்து கொள்வதாக கடந்த 3 மாதங்களுக்கு முன் இருவரும் அறிவித்திருந்தனர்.
இதனால் இருவரும் நடத்தி வந்த பில்-மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை நிலை என்னவாகும் என சலசலப்பு ஏற்பட்டது. இந்தநிலையில், அமெரிக்க சட்டப்படி 90 நாட்களுக்கு பிறகு நேற்று அவர்களுக்கு கிங் கவுண்டி நீதிமன்றத்தில் விவாகரத்து வழங்கப்பட்டது.
மேலும் அவர்கள் பிரிவதற்கு முன் எடுக்கப்பட்ட முடிவின்படி சொத்துக்களை பிரித்து கொள்ளுமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தற்போதைய நிலவரப்படி பில்கேட்ஸ் கைவசம் 11 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருக்கலாம் என சொல்லப்படுகிறது.