இந்தியா

அரியானாவில் பறவைக்காய்ச்சல்... 11 வயது சிறுவன் பலி...

அரியானாவில் பறவை காய்ச்சலுக்கு நடப்பாண்டில் முதல் பலி பதிவாகியுள்ளது.

Malaimurasu Seithigal TV
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தீராத காய்ச்சலுடன் சிகிச்சை பெற வந்த 11 வயது சிறுவனுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவனுக்கு கொரோனா இல்லை என உறுதியானது.
ஆனால் அவனுக்கு பறவைகள் மூலம் பரவக்கூடிய தொற்று பாதிப்பு இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.  இருப்பினும் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும், அவனுக்கு சிகிச்சை அளித்து வந்த ஊழியருக்கும் நிமோனியா பாதித்திருப்பதால் அவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறுவனுடன் தொடர்புடைய யாரேனுக்கும் இந்த பறவை காய்ச்சல் பரவியுள்ளதா என்பதை கண்டறிய, தேசிய நோய் தடுப்பு அமைப்பு சார்பில் குழு ஒன்று சிறுவனின் கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.