இந்தியா

பாஜக கவுன்சிலர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை....!!

ஜம்மு-காஷ்மீரில் பாஜக கவுன்சிலர் ஒருவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாஜக தலைவரும் நகராட்சி மன்ற உறுப்பினருமான ராகேஷ் பண்டிதா என்பவர் தீவிரவாதிவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

பாஜக கவுன்சிலர் ராகேஷ் பண்டிதா-வுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாவலர்கள் யாரும் இல்லாமல் அவர் டிரால் என்னும் பகுதிக்கு சென்ற நிலையில் மூன்று தீவிரவாதிகள் அவரை சுற்றிவளைத்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இதில் ராகேஷ் பண்டிதா சம்பவம் இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தாக்குதலில் ஈடுபட்ட மூவரில் பெண் ஒருவர் மட்டும் அடையாளர் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.