இந்தியா

காளையை அவிழ்த்து விட்ட பாஜக... சிதறிய தொண்டர்கள்... சாதகமாக்கிய கெலாட்!!!

Malaimurasu Seithigal TV

சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள குஜராத் மாநிலத்தில் அரசியல் கட்சியினர் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.  பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பலரும் அவரவர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் பிரமாண்ட பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றி கொண்டு இருந்தார். 

அழையா விருந்தாளி:

அப்போது, கூட்டத்தில் காளை ஒன்று நுழைந்து அங்கும் இங்கும் ஓடியதால் அசோக் கெலாட் பேச்சை கேட்க கூடி இருந்த தொண்டர்கள் சிதறி ஓடினர்.

சாதகமாக்கிய கெலாட்:

இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட அசோக் கெலாட், இது பாஜகவின் சதி என்றும் காங்கிரஸ் கூட்டங்களில் இடையூறு விளைவிக்க பாஜக இத்தகைய முயற்சியை மேற்கொள்கிறதுஎனவும் கூறினார்.  மேலும் என்னுடைய சிறு வயதில் இருந்து காங்கிரஸ் கூட்டத்தில் பாஜக காளையோ!பசுவையோ! அவிழ்த்து விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளது என்றும் தெரிவித்தார். 

-நப்பசலையார்