இந்தியா

" பாஜக திட்டமிட்டு வேண்டும் என்றே காங்கிரசை  புறக்கணித்து அரசியல் செய்கிறது”, - நாராயணசாமி

Malaimurasu Seithigal TV

இந்திய ஜனநாயகத்திற்கு ஒரே நாடு ஒரே தேர்தல் ஒத்துவராது என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

இந்திய ஜனநாயகத்திற்கு ஒரே நாடு ஒரே தேர்தல் ஒத்துவராத என்றும் வரக்கூடிய 5 மாநில தேர்தல் தோல்வி பயம் காரணமாக பாஜக இதுபோன்ற யுக்தியை பாஜக கையாள்வதாக புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:-  

“ ஒரே நாடு ஒரே தேர்தல் இந்திய ஜனநாயகத்திற்கு ஒத்துவராது இது கூட்டாச்சி தத்துவத்தை குலைக்கும் வேலை.  வரக்கூடிய 5 மாநில தேர்தலில் பாஜக தோல்வியடையும் என்ற பயத்தில் தேர்தலை தாமதபடுத்தவே பாஜக இது போன்ற யுக்தியை கையாள்கிறது”  என்று தெரிவித்த அவர்,

“ இந்த  தேர்தல்களில் தோல்வி அடைத்தால் எம்.பி.தேர்தலிலும்  இது எதிரொலிக்கும்  என்பதால், பாஜக இந்த  நாடகத்தை நடத்துகின்றனர் ”, என்றார்.

மேலும் ” இந்தியா கூட்டணியில் உள்ள சிறிய குறைகளை கலைந்து குறைந்த பட்ச  செயல்திட்டத்தோடு பாராளுமன்ற தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளனர்.   28 கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவிற்கு அஞ்சத்தை ஏற்படுத்திய காரணத்தால் தான் இந்தியா என்ற பெயரையை மாற்றி பாரத் என்று மோடி அழைக்கிறார்கள்.

இந்திய அரசிலமைப்பு சட்டத்தில் இந்தியா என்பதும் பாரத் என்பதும் ஒன்றுதான்.இந்திய அரசிலமைப்பு சட்டத்தை பாஜக மாற்ற நினைக்கிறது. இதனை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். சரியான பதிலை தேர்தலில் தருவார்கள்.உதயநிதியின் சனாதனம் குறித்து பேசியது அவரது கட்சியின் கொள்கை.
எல்லா கட்சிகளுக்கும் ஒவ்வொரு கொள்கை உண்டு அதைதான் அவர் பேசி இருக்கிறார் ”, என்றார்.

தொடர்ந்து பேசுகையில், “ மதம் வேறு அரசியல் வேறு. இதனை பெரிதுப்படுத்த தேவையில்லை. காங்கிரசை பொறுத்தவரை எம்மதமும் சம்மதம் என்ற நிலைப்பாட்டில்தான் உள்ளது. ஜி 20 மாநாட்டில் கேபினட் அந்தஸ்தில் உள்ள காங்கிரஸ் கட்சி்தலைவர் மல்லிகார்ஜுன கார்கேக்கு அழைப்பு விடுக்கவில்லை.  இது பாஜகவின் காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது. திட்டமிட்டு வேண்டும் என்றே காங்கிரசை  புறக்கணித்து அரசியல் செய்கிறது”, என சாடினார்.

மேலும், “ புதுச்சேரியில் இரண்டரை ஆண்டுகளாக பேனர் கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது. தடைச்சட்டம் அமலில் உள்ளது. அதனை அமல்படுத்தாமல் அதனை  காற்றில் பறக்கவிட்டுள்ளனர். அரசின் உத்தரவு மீறப்பட்டுள்ளது. புதுச்சேரி முழுவதும் சிக்கனல்களை மறைத்து பேனர் வைத்ததால் 2 உயிர்கள் பறிபோகியுள்ளது. இதற்கு முதல்வரும், உள்துறை அமைச்சரும் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும். புதுச்சேரியில் நலத்திட்டங்கள் ஆரம்பிப்பதோடு சரி;  அது பயன்பாட்டிற்கு வருவதில்லை”,  என்றும் குற்றம்சாட்டினார்.