இந்தியா

ஷாருக்கானுக்கு அவப்பெயர் ஏற்படுத்த சதியா? போதைபொருள் வழக்கில் ஆரியன் கான் கைதுக்கு பின்னணியில் பாஜக பிரமுகர்?...

நடிகர் ஷாருக்கானுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக அவரது மகன் சிக்கவைக்கப்பட்டு இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Malaimurasu Seithigal TV

ஷாருக்கான் மகன் ஆரியன் கான் மற்றும் அவரது நண்பரை கைது செய்து அழைத்து வந்த போது, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரியுடன் இருந்தவர் தான் பாஜக கட்சியின் தீவிர விசுவாசி என தெரிவித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை சொகுசு கப்பலில் போதைப் பொருள் இருந்ததாக நடத்திய சோதனையே ஒரு நாடகம் என்றும் நடிகர் ஷாருக்கானுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக அவரது மகன் சிக்கவைக்கப்பட்டு இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.இந்த நிலையில் ஆரியன் கான் மும்பை போதைப் பொருள் தடுப்பு அலுவலகத்தை இருந்த போது, பாஜகவைச் சேர்ந்த மனிஷ் பன்சாலி மற்றும் கிரண் கோசவி ஆகிய இருவரும் அங்கு வந்து செல்வதும் ஆரியன்கான் உடன் செல்பி எடுத்துக் கொண்ட காட்சியும் இணையத்தில் பரவி வருகிறது.

இந்த நிலையில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்திற்கு வந்து சென்றதை மனிஷ் பன்சாலியும் ஒப்புக் கொண்டார்.தகவல் கொடுப்பதற்காக வந்து சென்றதாகவும் தாம் பாஜகவின் தீவிர விசுவாசி என்றும் அவர் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.