இந்தியா

தீயணைப்பு துறைக்கு விண்ணப்பித்த பெண்கள் மீது தடியடி...

Malaimurasu Seithigal TV

மஹாராஷ்டிரா | மும்பையில் தீயணைப்பு படையினருக்கான ஆட்சேர்ப்பு முகாமின் போது பெண்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றம் நிலவியது.

மும்பை தஹிசார் பகுதியில் உள்ள தீயணைப்புப் துறை அலுவலகம் முன்பு பெண்கள் ஏராளமானோர் ஒன்று கூடினர். அப்போது, போதுமான உடற்தகுதி உடைய தங்கள் உயரம் குறைவாக இருப்பதாகக் கூறி நிராகரிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தனர்.

மேலும், போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட பெண்கள், அலுவலகத்திற்குள் நுழைய முயன்றதால் போலீசார் அவர்கள் மீது லேசான தடியடி நடத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.