இந்தியா

சிகிச்சை பலனின்றி கேப்டன் வருண் சிங் காலமானார்...

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விமானப்படை கேப்டன் வருண் சிங் காலமானார்.

Malaimurasu Seithigal TV

நீலகிரி மாவட்டம், குன்னூரில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் மரணம் அடைந்தனர். இந்த விபத்தில் விமானத்தை இயக்கிச் சென்ற விமானப்படை கேப்டன் வருண் சிங் மட்டும் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு வெலிங்டன் ராணுவ தளத்தில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பிறகு மேல் சிகிச்சைக்காக, கேப்டன் வருண் சிங் கடந்த 9- ஆம் தேதி பெங்களூருவுக்கு கொண்டு செல்லப்பட்டார். இங்குள்ள கமாண்டோ மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உயிர் காக்கும் கருவிகளுடன் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கேப்டன் வருண் சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.