இந்தியா

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள் வெளியானது!  

சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு மதிப்பெண்கள் இன்று வெளியாகியுள்ளன.

Malaimurasu Seithigal TV

சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு மதிப்பெண்கள் இன்று வெளியாகியுள்ளன.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாணவர்கள் 12ஆம் வகுப்பில், பருவத்தேர்வு அல்லது அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 40 சதவீதமும், 11ஆம் வகுப்பில் பாடங்களுக்கு நடத்தப்பட்ட இறுதித் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்களில் 30 சதவீதமும், 10ஆம் வகுப்பில் மொத்தமுள்ள 5 பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மூன்று பாடங்களின் மதிப்பெண்களில் 30 சதவீதமும் கணக்கில் கொள்ளப்பட்டு, 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி கணக்கிடப்பட்ட மதிப்பெண் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. மேலும், மதிப்பெண் கணக்கீட்டில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு கொரோனா பரவல் குறைந்த பின்னர் தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.