இந்தியா

ஏழைகளை மேம்படுத்துவதே மத்திய அரசின் முதல் பணி...பிரதமர் மோடி பேச்சு!

Tamil Selvi Selvakumar

ஏழைகள் மற்றும் பின்தங்கியோராக அறியப்படும் அனைவரின் வாழ்வையும் மேம்படுத்துவதே மத்திய அரசின் முதல் பணியாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற சமூக சீர்திருத்தவாதியும், ஆரிய சமாஜ நிறுவனருமான தயானந்த சரஸ்வதியின் 200வது பிறந்தநாள் விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், மகரிஷி காட்டிய பாதை கோடிக்கணக்கானவர்களுக்கு நம்பிக்கை அளித்ததாக தெரிவித்தார்.

சமூக பாகுபாடு, தீண்டாமைக்கு எதிராக வலுவான பிரசாரத்தை மகரிஷி மேற்கொண்டதாகவும், பெண்கள் முன்னேற்றம் அவர் நோக்கங்களில் முதன்மையாக இருந்ததாகவும் கூறிய பிரதமர், இன்று ரஃபேல் போர் விமானங்களையும் பெண்கள் இயக்குவதாக தெரிவித்தார்.