இந்தியா

டிஜிலாக்கரில் சேமிக்கப்பட்டுள்ள கல்வி சான்றிதழ்களை அங்கீகரிக்கலாம் : உயர்கல்வி நிறுவனங்களுக்கு பரிந்துரை!!

டிஜிலாக்கர் கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள அனைத்து கல்வி சார்ந்த ஆவணங்களையும் உயர் கல்வி நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்துள்ளது.

Malaimurasu Seithigal TV

இந்தியாவில் அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது.  தனி மனிதர்களின் ஆவணங்களை பாதுகாக்க டிஜிலாக்கர் என்னும் அமைப்பு ஏற்படுத்த ப்பட்டுள்ளது.

இதில் ஆதார் எண், கல்வி சான்றிதழ்கள், வங்கி கணக்கு விவரங்கள் ஆகியன டிஜிட்டல் முறையில் சேமித்து வைத்துக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. எந்த வகையான அவசர சூழலிலும் ஆதார் எண்ணை மட்டும் பயன்படுத்தி இந்த ஆவணங்களை பயன்படுத்தி கொள்ள முடியும்.

இந்தநிலையில் டிஜி லாக்கரில் சேமிக்கப்பட்டுள்ள கல்வி சான்றிதழ்கள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்டவை என பல்கலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளது. இதனை அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் அங்கீகரிக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது.