இந்தியா

சண்டிகர் விமான நிலையத்துக்கு பெயர் மாற்றம்...மனதில் குரல் நிகழ்ச்சியில் பிரதமட் பேச்சு!

Tamil Selvi Selvakumar

சண்டிகர் விமான நிலையத்துக்கு ஷாஹீத் பகத்சிங் என பெயர்மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர்:

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் அகில இந்திய வானொலி மூலம் மன்கிபாத் என்ற மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசி வருகிறார். தொடர்ந்து இன்று பேசிய பிரதமர், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுகளில் இந்தியா பல்வேறு உயரங்களை எட்டி வருவதாக பெருமிதம் தெரிவித்தார். அத்துடன், சண்டிகர் விமான நிலையத்துக்கு ஷாஹீத் பகத்சிங் என பெயரை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

மக்கள் கருத்து கூற வேண்டும்:

பின்னர், இந்தியாவுக்குத் திரும்பியுள்ள 8 சிறுத்தைகளால்  மக்கள் மகிழ்ச்சியடைந்ததாகவும் அவற்றுக்கு பெயர் சூட்ட மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Vocal for local திட்டம்:

இதனைத்தொடர்ந்து, காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 2ம் தேதி "Vocal for local" என்ற திட்டத்தை முன்னெடுப்பதாகவும் காதி, கைத்தறி, கைவினைப்பொருட்கள் உள்ளிட்ட உள்ளூர் பொருட்களை வாங்க முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.