இந்தியா

சக மாணவிகளின் வீடியோக்களை இணையத்தில் கசிய விட்ட மாணவி...வெடித்த போராட்டம்!

Tamil Selvi Selvakumar

சண்டிகர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளை தவறாக புகைப்படம் எடுத்து அந்த வீடியோவை கசிய விட்ட சக மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.

சக மாணவிகளின் வீடியோக்களை கசியவிட்ட மாணவி:

பஞ்சாப் மாநிலம் லூதியானா நெடுஞ்சாலையில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவியே, சக மாணவிகளின் ஆட்சேபனைக்குரிய புகைப்படங்களை எடுத்து கசிய விட்டதாக தெரிகிறது. தொடர்ந்து அதனை கசிய விடாமல் இருக்க, அவர்களிடம் பணம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இத்தகவல் காட்டுத்தீ போல் பரவிய நிலையில், இதனை கண்டித்து ஏராளமான மாணவிகளும் மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர்.

மாணவியை கைது செய்த போலீசார்:

தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்ட மாணவி குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். யாரும் தற்கொலை முடிவினை நாடவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மாணவர்கள் அமைதி காக்க வேண்டும்:

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மாணவர்கள் அமைதி காக்க வேண்டுமெனவும், சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் எந்த வகையிலும் தப்ப முடியாது எனவும் பஞ்சாப் கல்வித்துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் தெரிவித்துள்ளார்.