இந்தியா

புதுச்சேரி முதலமைச்சரை சந்தித்த கோவை சிறுவர்கள்!

Malaimurasu Seithigal TV

சுற்றுலா வந்த தனியார் பள்ளி சிறுவர்கள் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து, அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 1 முதல் 7 ஆம் வகுப்பு படிக்கும் 50 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இன்று புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர். அப்போது நகரப்பகுதியில் உள்ள முக்கிய வனிக வீதியான நேரு வீதியை சிறுவர்கள் பார்வையிட்டனர். 

அப்போது அங்குள்ள ஒரு கடையில் முதல்வர் ரங்கசாமி இருந்துள்ளார். இதனை பார்த்த தனியார் பள்ளி சிறுவர்கள் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். மேலும் சிறுவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி சாக்லேட் வழங்கி வாழ்த்தி அனுப்பினார்.