இந்தியா

ஃப்ரைட் ரைஸ்-இல் கரப்பான்; அது வெங்காயம் என கூறும் ஹோட்டல்:

சண்டிகர் மாலில், ஒரு தனியார் உணவகத்தில் ஃப்ரைட் ரைசில் கரபான் பூச்சி இருந்ததாகப் புகார் எழுந்த நிலையில், அந்த உணவகம், அது வருத்த வெங்காயம் எனக் கூறியுள்ளது. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Malaimurasu Seithigal TV

சண்டிகரில் உள்ள நெக்சஸ் எலாண்டே மாலில் சீன உணவு வகைகளை விற்கும் ஒரு தனியார் உணவகம் செயல்பட்டு வருகிறது. கடந்த வெள்ளிக் கிழமை அன்று, அந்த உணவகத்தில் வாங்கிய ஃப்ரைட் ரைசில் இறந்த கரப்பான் பூச்சிக் கிட்ந்ததாக புகார் எழுந்துள்ளது. முன்பு, இதே உணவகத்தில் இருந்து வாங்கிய சோலே படூரேவில் உயிருடன் இருக்கும் பல்லி இருந்ததாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மைளி காம்ப்ளெக்ஸில் குடியிருக்கும் அணில் குமார் என்பவர் தான் ‘நி ஹாவோ’ (Ni Hao) என்ற உணவகத்தில் ஃப்ரைட் ரைஸ் வாங்கி இருக்கிறார். இன்ஹ சீன வகை உண்வில், இறந்த கரப்பான் கால்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அணில், உணவக ஊழியர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், வர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அது வெறும் வருத்த வெங்காயம் எனத் தட்டிக் கழித்துள்ளனர். கோபமடைந்த அணில், இது குறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

நடத்தப்பட்ட விசாரணையில், புகார் செய்யப்பட்ட உணவில் கரப்பான் இருந்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இந்த சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்த மாலின் செய்தித் தொடர்பாளர், அனைத்து உணவகங்களிலும் சோதனை நடப்பெற இருப்பதாக உறுதியளித்தார். மேலும், “நடந்த சம்பவம் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இது தொடர்ச்சியாக எழுந்த இரண்டாவது புகார் என்பது எங்களுக்கு வருத்தமளிக்கிறது. எங்கள் வாடிக்கையாளர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியமானது. மேலும், உணவு நீதிமன்றத்தில் முழுமையான உணவு பாதுகாப்பு தணிக்கையை நடத்தி தேவையான தண்டனை நடவடிக்கைகளை எடுக்க நிர்வாகத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறினார்.

இது தொடர்பாக, அயான் ஃபுட்ஸ் நிறுவனத்தின் தலைவர் புனீத் குப்தா, தனது கடையின் வாடகைக் குறித்து, கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பிரச்சனையை வைத்து பழி வாங்கும் செயலாக ஊழியர் இப்படி செய்திருக்கிறார்” எனக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.