இந்தியா

விவசாயிகளுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு... தெலுங்கானா முதலமைச்சர் கோரிக்கை...

விவசாயிகளுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க சந்திரசேகர ராவ் கோரிக்கை

Malaimurasu Seithigal TV

வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு தலா 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, மத்திய அரசுக்கு தெலுங்கானா முதலமைச்சர் கோரிக்கை விடுத்து உள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களில் பாதகமான அம்சங்கள் இருப்பதாக கூறி, டெல்லியில் ஒரு வருடத்திற்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், மத்திய அரசு கொண்டு வந்த சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடிவு செய்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவுகள் வெளிவந்தன. இதுகுறித்து கூறிய தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு தங்களுடைய அரசு சார்பில் தலா 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்து உள்ளார். விவசாயிகளுக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என, மத்திய அரசை அவர் வலியுறுத்தி உள்ளார்.