சத்தீஸ்கரில் பசி மற்றும் ஊழல் இருந்து வந்த நிலையில் அது தற்போதைய காங்கிரஸ் ஆட்சியில் மாறியுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா கூறியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தாரில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், பொதுமக்கள் அரசாங்கத்தை சார்ந்து இருக்கிறார்கள். ஆனால், பொதுமக்களின் தன்னம்பிக்கையை பாஜக அரசு சிதைத்து விட்டதாக குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், தற்போதைய காங்கிரஸ் ஆட்சியில் பொதுமக்களின் பெருமையை மீட்டுள்ளதாக பிரியங்கா காந்தி தெரிவித்தார்.