இந்தியா

கார்கே தலைமையில் காங்கிரஸ் முக்கிய ஆலோசனை...!

Malaimurasu Seithigal TV

ஒரே நாடு ஒரே தேர்தல் பரபரப்புகளுக்கு மத்தியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி உள்ளிட்டோர் டெல்லியில் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.

சட்டப்பேரவை, நாடாளுமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தும் ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா, வரும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது.

இதுதொடர்பாக வரும் 5ம் தேதி டெல்லியில் கார்கே தலைமையில் இந்தியா கூட்டணிக் கட்சியினர் ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில் கார்கே, ராகுல்காந்தி, கே.சி.வேணுகோபால் ஆகியோர் டெல்லியில் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.