தொடர்ந்து அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காங்கிரசின் மூத்த தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத், கட்சியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரின் 20 தலைவர்கள் வெளியேறினர். தொடர்ந்து, 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தன்னை புதுப்பித்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறது.
இந்நிலையில் விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் மீது ஜிஎஸ்டி வரிவிதிப்பு உள்ளிட்டவற்றை முன்னிறுத்தி டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராகுல்காந்தி இப்போராட்டத்தில் கலந்துகொண்ட நிலையில், வெளிநாட்டில் இருப்பதால் சோனியா காந்தியும், பிரியங்கா காந்தியும் இதில் பங்கேற்கவில்லை.