இந்தியா

ராஜ்யசபா தேர்தல் - எம்.எல்.ஏக்களை ரிசார்ட்களில் தங்க வைத்து பாதுகாக்க காங்கிரஸ் தீவிரம்! ஏன் தெரியுமா?

Tamil Selvi Selvakumar

ராஜ்யசபா தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர்கள் பாஜகவிடம் கோட்டை விட்டுவிடக்கூடாது என்பதற்காக ராஜஸ்தான் எம்.எல்.ஏக்களை ரிசார்ட்டில் தங்க வைக்க மாநில காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

மாநிலங்களவை தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து எதிர்கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களுடன் குதிரை பேரம் பேசி வரும் பாஜக,  அவர்களை தன்வசம் இழுத்து வருவதாக கூறப்படுகிறது. காங்கிரஸிலிருந்து ஏற்கனவே பலர் கட்சியை விட்டு வெளியேறி பாஜகவில் இணைந்து வருகின்றனர்.

இந்தநிலையில் மாநிலங்களவை தேர்தலில் எம்.எல்.ஏக்களின் ஆதரவு பாஜக வசம் சென்றுவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ள ராஜஸ்தான் மாநில காங்கிரஸ், தங்களது எம்.எல்.ஏக்களை சமீபத்தில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற உதய்ப்பூர் ரிசார்ட்டில் தங்க வைக்க முடிவு செய்துள்ளது.