இந்தியா

டெல்லியின் புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணிகள் இம்மாதம் தொடக்கம்..?

டெல்லியில் புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணிகள் இம்மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Malaimurasu Seithigal TV

டெல்லியில் நிர்வாக வசதிக்காக 22 லட்சம் சதுர அடியில் புதிய தலைமைச் செயலகத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பணிச்சுமை மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை காரணமாக கூடுதல் இடவசதி தேவை என்பதால், புதிய தலைமைச் செயலகத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து லுட்யென்ஸ் பங்களா பகுதியில் 10 ஏக்கரில், 22 லட்சம் சதுர அடி பரப்பில் புதிய தலைமைச் செயலகத்தை அமைக்க மத்திய அரசின் பணி மற்றும் பயிற்சி துறை முடிவு செய்தது.

அதற்காக வரைபடம், திட்ட மதிப்பீடு ஆகியவற்றை தயார் செய்யும் பணி முடிவடைந்து, புதிய தலைமை செயலக கட்டுமானத்திற்கான டெண்டரும் இறுதி செய்யப்பட்டுவிட்டது. 3 ஆயிரத்து 269 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள டெல்லி புதிய தலைமைச் செயலகத்தின் கட்டுமானப் பணிகள் இம்மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.