இந்தியாவின் இமயமலைத் தொடரில் உள்ள புனிதமான இந்து கோவில்களில் ஒன்றிற்குச் செல்லும் மக்கள், உள்ளே அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, தங்கள் நம்பிக்கையைச் சோதிக்கும் விதமாக பசுவின் சிறுநீரை அருந்த வேண்டும் என்று கோவில் நிர்வாகம் அறிவுறித்தியுள்ளது.
அங்கு, சார் தாம் யாத்திரை ஞாயிற்றுக்கிழமை தொடங்கவிருப்பதால், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோயில்களின் கதவுகள் திறக்கப்பட உள்ளன. இருப்பினும், இம்முறை கங்கோத்ரி கோயில் குறிப்பிட்ட சில பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரகாண்டில் உள்ள கங்கோத்ரி கோயிலுக்கான புதிய நுழைவு விதிகளின்படி , ஒவ்வொரு பார்வையாளரும் பஞ்சகவ்யத்தை உட்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது பால், தயிர், நெய், தேன் மற்றும் பசுவின் சிறுநீர் ஆகிய ஐந்து பசு சார்ந்த பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு பானமாகும். கோயிலை மேற்பார்வையிடும் குழுவின் கூற்றுப்படி, இதன் நோக்கம் இறை நம்பிக்கை இல்லாதவர்களை கோவிலுக்கு உள்ளே அனுமதிக்காமல் தடுப்பதே ஆகும். இந்து நம்பிக்கை மற்றும் நடைமுறையின் பாரம்பரியத்தை விவரிக்கப் பயன்படுத்தப்படும் 'சனாதன தர்மம் ' என்ற சொல்லைக் குறிப்பிட்டு , 'சனாதனம் அல்லாதவர்களையும் , நம்பிக்கையற்றவர்களையும் கங்கோத்தரி கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுப்பதற்காகவே இது செய்யப்படுகிறது' என்று குழுவின் தலைவர் தர்மேந்திர செம்வால் 'தி இன்டிபென்டன்ட்' பத்திரிகையிடம் கூறியிருக்கிறார்.
மேலும், தர்மேந்திர செம்வால், "கதவுகள் திறக்கப்படும்போது, உள்ளே நுழைவதற்கு முன்பு பஞ்சகவ்வியத்தை வழங்குவதற்காக, வாயில்களில் சிலரை நியமிப்போம். சனாதனத்தை மதிப்பவர்களுக்கு அதை உட்கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. இந்த புனிதப் பொருள் தங்களுக்கு வழங்கப்படுவதை பக்தர்கள் பாக்கியமாகக் கருத வேண்டும். முன்னதாக, பூசாரிகளும் கருவறைக்குள் நுழைபவர்களும் மட்டுமே அதை உட்கொண்டனர். இந்த நடைமுறை நம்பிக்கையையும் ஆன்மீகத்தையும் மேம்படுத்தும்," என்று அவர் கூறியுள்ளார். முன்னதாக, பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் குழு, தனது நிர்வாகத்தின் கீழ் உள்ள இரண்டு கோயில்கள் மற்றும் மேலும் 45 கோயில்களுக்குள் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைவதற்குத் தடை விதித்திருந்தது. உள்ளே நுழைய விரும்புவோர், சனாதனத்தில் நம்பிக்கை கொண்டிருப்பதாக உறுதிப்படுத்தும் பிரமாணப் பத்திரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதன் தலைவர் கூறியிருந்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, கங்கோத்ரி பஞ்சகவ்யத் தேவையை அறிமுகப்படுத்தியுள்ளார். நவம்பர் 2025-க்குள், சுற்றுலாத் துறை நான்கு புனிதத் தலங்களிலும் சேர்த்து 5.1 லட்சம் பார்வையாளர்களைப் பதிவு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 4.35 லட்சம் அதிகமாகும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த இந்துக்கள் அல்லாதோர் நுழைவுகளை குறித்து நௌடியால் அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடியதாக அவர் கூறினார். உலகெங்கிலும் உள்ள மக்கள் கேதார்நாத் கோவிலுக்கு வருகை தருவதாகவும், அதில் இந்து அல்லாதவர்கள் அவர்களின் மதநம்பிக்கையை புண்படுத்துவதாக மக்கள் கூறியதாக அவர் கூறினார். மேலும், நான்கு புனிதத் தலங்களிலும் இந்துக்கள் அல்லாதவர்களைத் தடை செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது இதுபோன்ற விதிமுறைகளால் அதிகமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், மாற்று மதத்தினர், திரைபிரபலங்கள் போன்றோர் வருவது இயல்பு. ஆனால், தற்போது இதுபோன்ற விதிமுறைகளால் அப்பகுதியில் சுற்றுலா பயணிகளின் வருகையை நம்பிவாழும் பலரும் பாதிக்கப்பட நேரிடலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.