இந்தியா

மீண்டும் கொரோனா அதிர்வலை: நாடு முழுவதும் 17 ஆயிரத்தை கடந்த தொற்று பாதிப்பு!

Tamil Selvi Selvakumar

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று 12 ஆயிரமாக இருந்த கொரோனா தினசரி பாதிப்பு இன்று 17 ஆயிரத்து 336 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 13 பேர் தீவிர தொற்று பாதிப்புக்கு பலியாகியுள்ளனர்.

இதில் நேற்று மட்டும் 13 ஆயிரத்து 29 பேர் தொற்று பாதிப்பு நீங்கி வீடு திரும்பியுள்ள நிலையில் 88 ஆயிரத்து 284 பேர் தொற்று பாதிப்புக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் 196 கோடியே 77 லட்சத்து 33 ஆயிரத்து 271 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் நேற்று மட்டும் 13 லட்சத்து 17 ஆயிரத்து 107 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.