இந்தியா

உச்சநீதிமன்ற நீதிபதிகள் 10 பேருக்கு கொரோனா..!அவசர வழக்குகள் மட்டுமே நேரடி விசாரணை

உச்சநீதிமன்ற நீதிபதிகள் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Malaimurasu Seithigal TV

உச்சநீதிமன்ற நீதிபதிகள் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரது பிரிவு உபசார நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நீதிபதிகள் சிலருக்கு கொரோனா உறுதியானது. அதனைத்தொடர்ந்து அவசர வழக்குகள் மட்டுமே நேரடி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் அங்கு தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 32 என கூறப்படும் நிலையில், இந்த அதீத பரவல் நீதிமன்ற வழக்கு விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர உச்சநீதிமன்ற ஊழியர்கள் 400 பேருக்கும், அதாவது 30 சதவீதம் ஊழியர்களுக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தற்போது தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.