கொரோனா நிலவரங்களை தினசரி வெளியிட்டு வரும் மத்திய சுகாதார அமைச்சகம்,
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஆயிரத்து 675 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதனால் தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 832 ஆக குறைந்துள்ளதாகவும், ஒரே நாளில் தொற்றுக்கு 31 பேர் பலியானதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனால் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 லட்சத்து 4 ஆயிரத்து 490 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 13 லட்சத்து 76 ஆயிரத்து 878 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்ட நிலையில் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டதன் மொத்த எண்ணிக்கை 192 கோடியே 52 லட்சத்து 70 ஆயிரத்து 955 ஆக அதிகரித்துள்ளது.