இந்தியா

உருமாறிய கொரோனா வைரஸ்... இந்தியாவில் மட்டுமில்லை... உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்!!

Malaimurasu Seithigal TV

இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ்,  53 நாடுகளில் காணப்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் தற்போது பேரிழப்பை ஏற்படுத்தி வரும் உருமாறிய கொரோனா வைரஸுக்கு  உலக சுகாதார அமைப்பு 'B.1.617' என்று பெயர் வைத்துள்ளது. இந்த கொரோனா திரிபானது தற்போது 53 நாடுகளில் காணப்படுவதாக உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வமாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் 7 நாடுகளில் பரவி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், மொத்தம் 60 நாடுகளில் இந்த திரிபு பரவல் காணப்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பின் வாராந்திர தொற்றுநோயின் புள்ளிவிவரங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.