இந்தியா

மத்திய அமைச்சர்களின் கிரிமினல் பின்னணி...

பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 42 சதவீத அமைச்சர்கள் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் அதிர்ச்சி  தகவல் வெளியிட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV
கடந்த 2019 ஆம் ஆண்டு 2-வது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடி 2 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக தனது அமைச்சரவையை மாற்றியமைத்துள்ளார். இதில் ஏற்கெனவே இருந்த பல அமைச்சர்கள் ராஜினாமா செய்து அத்துறைக்கு புதிய அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் மொத்தம் 43 பேர் புதிதாக அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். இது மட்டுமின்றி ஏற்கனவே மத்திய இணை அமைச்சர்களாக உள்ள ஏழு பேர் கேபினேட் அமைச்சர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மோடியின் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மொத்தம் 78 அமைச்சர்களில்,  42 சதவீத அமைச்சர்கள் கிரிமினல் வழக்குகளுடன் தொடர்புடையவர்கள் எனவும் 90 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் எனவும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் 4 பேர் மீது கொலை முயற்சி தொடர்பாக வழக்கு பதியபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.