இந்தியா

இந்த 8 மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிப்பு..! அரசு அதிரடி அறிவிப்பு

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் எட்டு மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் எட்டு மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் குறைந்த போதும், பெலகாவி, சிக்மகளூரு, தட்சிணா கன்னடா, ஹாசன், மைசூரு, மண்டியா, சிவமோகா, துமகுரு ஆகிய 8 மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்தன.

இதையடுத்து அந்த 8 மாவட்டங்களிலும் ஜூன் 14 ஆம் தேதிக்கு பின்னரும் ஊரடங்கை நீட்டிக்குமாறு முதலமைச்சர் எடியூரப்பா உத்தரவிட்டார். மேலும் கொரோனா பரிசோதனை முடிவுகளை நோயாளிகளுக்கு 24 மணி நேரத்துக்குள் தெரிவித்து விரைந்து சிகிச்சை அளிக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.