இந்தியா

ஊரடங்கை கட்டாயப்படுத்துங்கள்... மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்...

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கை கட்டாயப்படுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Malaimurasu Seithigal TV

கேரளாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் வர மறுக்கிறது. அங்கு நேற்றும் 30 ஆயிரத்து 803 பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டு இருந்தனர். மாநிலத்தில் தொற்று விகிதம் 20 சதவீதக்கும் மேல் நீடித்து வருகிறது. அங்கு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமல்படுத்த தயங்குவதே தொற்று அதிகரிக்க காரணம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

பாதிக்கப்பட்டவர்களில் 85 சதவீதத்துக்கு மேற்பட்டோர் வீடுகளிலேயே தனிமையில் இருக்கும் நிலையில், அந்த பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளன.

எனவே மாநிலத்தில் கட்டுப்பாட்டு பகுதிகளை அதிகரித்து, ஊரடங்கு அமல்படுத்த வேண்டியும், குறிப்பாக பண்டிகை காலங்களில் இவற்றை கட்டாயமாக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதுபோன்று கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் மாநிலத்தில் 2 வாரங்களுக்குள் தொற்று கட்டுக்குள் வரும் என நிபுணர்களும் கூறியிருப்பதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.