இந்தியா

குறையும் கொரோனா பாதிப்பு.. இதுக்கெல்லாம் 100 சதவீத அனுமதி - கேரளா அரசு

கேரளாவில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் கடந்த சில வாரங்களாகவே குறைந்து வருகிறது. ஆனால், கேரளாவில் மட்டும் கொரோனா பரவல் அதிகரித்த வண்ணம் தான் இருந்தது. இதனால், அங்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், கேரளாவில் டெல்டா மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகள் குறைந்து வருவது போல் காணப்படுகிறது. இதை தொடர்ந்து, முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு கூடுதல் தளர்வுகளை அறிவித்துள்ளது.

அதன்படி ஓட்டல்கள், மதுமான விடுதிகள், உணவு விடுதிகள் மற்றும் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் அமர்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 25 சதுர அடியில் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள 1500 பேர் வரை அனுபாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.