இந்தியா

டெல்லி கலால் வழக்கில் அடுத்தடுத்து கைதாகும் முக்கிய புள்ளிகள்...!

Tamil Selvi Selvakumar

தெலங்கானா முதலமைச்சரின் மகள் கவிதாவின் முன்னோடியாக கூறப்படும் தொழிலதிபர் அருண்பிள்ளை, டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மதுபானக் கொள்கையால் 100 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கை அமலாக்கத்துறையினர் மற்றும் CBI விசாரித்து வருகிறது.

முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக, டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். இவரைத்தொடர்ந்து பல்வேறு முக்கியப் புள்ளிகள் அடுத்தடுத்து கைதாகினர்.

இந்நிலையில், புதிய மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் ஐதராபாத் தொழிலதிபர் அருண்பிள்ளையை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.