இந்தியா

இனி பேசுவ.... பாபா ராம்தேவிற்கு டெல்லி உயர்நீதிமன்றம் செக்

Malaimurasu Seithigal TV

அலோபதி மருத்துவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பாபா ராம்தேவிற்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கொரோனா தொற்றின் தாக்கம் அதிதீவிரமடைந்துள்ள சூழலில், தம்முடைய பதஞ்சலி நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் கொரோனில் கிட் எனப்படும் மருந்து, கொரோனவை முற்றிலும் குணப்படுத்துவதாக ராம்தேவ் விளம்பரம் செய்து வருகிறார். இதற்கு கண்டனம் தெரிவித்து வழக்கு தொடர்ந்துள்ள டெல்லி மருத்துவ கூட்டமைப்பு, பதஞ்சலி பொருட்களை விற்பனை செய்வதற்காக பாபா ராம்தேவ் பொய்யான தகவலை பரப்புவதாகவும், இதனால் மக்கள் திசை திருப்பப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து, ஜூன் 13ஆம் தேதி வரை கொரோனில் கிட் குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கக்கூடாது என பாபா ராம்தேவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.