இந்தியா

பெண்ணிடம் ஆசை வலையில் சிக்கிய விமானப்படை வீரர்..! பாதுகாப்பு சார்ந்த தகவல்களை கசியவிட்டதால் கைது!!

பாதுகாப்பு சார்ந்த தகவல்களை கசியவிட்டதாக விமானப்படை வீரர் ஒருவர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tamil Selvi Selvakumar

கான்பூரை சேர்ந்தவர் தேவேந்திர குமார் சர்மா. இவர் டெல்லியில் உள்ள விமானப்படை பதிவு அலுவலகத்தில் நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

அண்மையில் இவர் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புக்கு தகவல் கொடுப்பதாக, அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்படவே டெல்லி குற்றப்பிரிவு போலீசார் அவரை கண்காணிக்க தொடங்கினர்.

அதன்படி பெண் மூலம் தேவேந்திர குமார் சர்மாவை ஆசை வலையில் வீழ்த்த செய்துள்ளனர். இதில் மயங்கிய தேவேந்திர குமார், அப்பெண்ணிடம் விமானப்படையினர் நிறுவல்கள் மற்றும் வீரர்கள் பற்றிய தகவல்களை கசிய விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை ஆதாரத்துடன் கைது செய்த டெல்லி போலீசார் சிறையில் அடைத்தனர்.