இந்தியா

பக்தர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திருப்பதிக்கு வரவேண்டும் - வெங்கையா நாயுடு

Tamil Selvi Selvakumar

அனைவருக்கும் ஏழுமலையானை தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைக்க வசதியாக, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திருப்பதிக்கு வாருங்கள் என பக்தர்களுக்கு குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது பேத்தியின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு திருப்பதிக்கு வருகை தந்தார்.

அப்போது, வரிசையில் சென்று ஏழுமலையானை தரிசித்த அவருக்கு, தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைவருக்கும் ஏழுமலையானை தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைக்க வசதியாக, திருப்பதி மலைக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்கள் வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.