இந்தியா

20 மணிநேரம் காத்திருந்து பெருமாள் தரிசனம் செய்த பக்தர்கள்...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் சுமார் 20 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Malaimurasu Seithigal TV

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் இலவச தரிசன வரிசை, ஆன்லைன் மூலம் ரூபாய் 300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதில் வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் கூடுதலாக பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அதன்படி நேற்று முன்தினம் 80 ஆயிரத்து 94 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இந்நிலையில், இவர்கள் நீண்ட வரிசையில் சுமார் 20 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். குறிப்பாக ரதசப்தமி நாளையிட்டி கூட்டம் களை கட்டியது குறிப்பிடத்தக்கது.