இந்தியா

முதலாம் உலகப்போருக்கு முந்தைய பீரங்கிகள் கண்டுபிடிப்பு!!!

Malaimurasu Seithigal TV

ஹூக்ளியின் இடது கரையில் கண்டெடுக்கப்பட்ட பீரங்கிகள் முதலாம் உலகப் போருக்கு முந்தையவை என்றும், அவை கப்பல்களை வெடிக்கச் செய்வதற்காக உருவாக்கப்பட்டவை என்றும் கேப்டன் ஜாய்தீப் சக்ரவர்த்தி கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள ஹூக்ளி ஆற்றின் கரையில் இந்திய கடற்படை வீரர்கள் பழைய பீரங்கிகளை கண்டுபிடித்துள்ளனர்.  ஹூக்ளியின் இடது கரையில் ஒரு ஆபரேஷனில் ஈடுப்பட்டிருந்தபோது இந்திய கடற்படை வீரர்கள் இந்த துப்பாக்கிகளை கண்டுபிடித்துள்ளனர்.  

முதலாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட ஐந்து பீரங்கிகள் கொல்கத்தாவில் உள்ள ஆற்றின் கரையில் இருந்து கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையின் பெங்கால் பகுதி தலைமையகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

ஹூக்ளியின் இடது கரையில் கண்டெடுக்கப்பட்ட பீரங்கிகள் முதலாம் உலகப் போருக்கு முந்தையவை என்றும், அவை கப்பல்களை வெடிக்கச் செய்வதற்காக உருவாக்கப்பட்டவை என்றும் கேப்டன் ஜாய்தீப் சக்ரவர்த்தி கூறியுள்ளார்.  இந்த துப்பாக்கிகள் இங்குள்ள இந்திய கடற்படையின் பெங்கால் பகுதியின் தலைமையகமான ஐஎன்எஸ் நேதாஜி சுபாஷ் அருங்காட்சியகத்தில் பார்வையாளர்களுக்காக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

-நப்பசலையார்