இந்தியா

கைதிகளுக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளதா...?!!

Malaimurasu Seithigal TV

பொதுநல வழக்கு மனுவை 2019 ஆம் ஆண்டு ஆதித்ய பிரசன்னா பட்டாச்சார்யா என்பவர் தாக்கல் செய்தார். அப்போது அவர் தேசிய சட்டப் பல்கலைக்கழக மாணவராக இருந்தார். 

கைதிகள் வாக்களிக்க தடை:

இந்தியாவின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு வாக்குரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு மீது, மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி, பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

பொதுநல மனு:

இந்த மனுவை 2019 ஆம் ஆண்டு ஆதித்ய பிரசன்னா பட்டாச்சார்யா என்பவர் தாக்கல் செய்தார். அப்போது அவர் தேசிய சட்டப் பல்கலைக்கழக மாணவராக இருந்தார். மனுவில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 62(5) பிரிவின் செல்லுபடியை சவால் செய்துள்ளது இந்த மனு.  அரசியலமைப்பு சட்டத்தின் இந்த பிரிவு சிறையில் உள்ள ஒருவர் வாக்களிக்க தடை விதிக்கிறது. வழக்கு டிசம்பர் 29 அன்று விசாரணைக்கு வரவுள்ளது.

தற்போதுள்ள நடைமுறை:

பிரதிநிதித்துவ சட்டத்தின் மேற்கூறிய பிரிவில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள யாரும் எந்த தேர்தலிலும் வாக்களிக்க முடியாது என கூறப்பட்டுள்ளது.  அத்தகைய நபர், சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், போக்குவரத்து காவலில் இருந்தாலும் அல்லது போலீஸ் காவலில் இருந்தாலும், வாக்களிக்கத் தகுதியற்றவராவார்.

-நப்பசலையார்