இந்தியா

சிகரெட் பிடிக்கிறிங்களா? அப்போ கொரோனா கன்பார்ம்!

Malaimurasu Seithigal TV

புகை பிடிப்பவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமையேற்று பேசிய மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், இந்தியாவில் புகையிலை பயன்பாட்டால் தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாகவும், இதனால் ஏற்படும் பொருளாதார சுமை, 1.77 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

இது நாட்டின் மொத்த உற்பத்தியில் ஒரு சதவீதம் என குறிப்பிட்ட அவர், புகை பிடிப்பவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் 40 முதல் 50 சதவீதம் அதிகமாக உள்ளது எனவும் கூறினார்.

மத்திய, மாநில அரசுகளின் தொடர் முயற்சியால் கடந்த 2009 - 10 ஆம் ஆண்டுகளில் 34.6 சதவீதமாக இருந்த புகையிலை பயன்பாடு 2016 - 17 ஆண்டுகளில் 28.6 சதவீதமாக குறைந்துள்ளது என்றார்.