இந்தியா

என்னது ரெண்டு தடுப்பூசி போட்டாலும் கொரோனா வருதா?

Malaimurasu Seithigal TV

உத்தரகாண்டில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும், 93 சதவீத போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அதில் அதிகப்படியான போலீசாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 93 சதவீதம் பேர் நோய்த்தொற்று ஏற்படுவதற்கு முன்பு இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டவர்கள் என்பது வேதனை அளிக்கும் விஷயமாக உள்ளது.

இதைத்தவிர போலீசாரின் குடும்பங்களில் 751 பேருக்கு நோய்த் தொற்றுகள் இருந்ததாகவும், அதில் 64 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.