இந்தியா

RRR படத்தை மோடி இயக்கினார் என பெருமை பட வேண்டாம் - மல்லிகார்ஜூன கார்கே !

Tamil Selvi Selvakumar

ஆர்ஆர்ஆர் படத்தை பிரதமர் மோடி தான் இயக்கினார் என மத்திய அரசு பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டாம் என மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் அமர்வில் ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, இது தென்னிந்தியர்களுக்குக் கிடைத்த வெற்றி எனவும் அவர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம் எனவும் குறிப்பிட்ட அவர், தாங்கள் தான் பாடலை எடுத்தோம், பாடலை எழுதினோம், பிரதமர் தான் ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கினார் என ஆளுங்கட்சி பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டாம் எனவும் கூறினார். அப்போது, அவையே சிரிப்பலையில் மூழ்கியது.