பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற ட்ரோனை எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் அருகே உஞ்சா தக்காலாவில் சந்தேகத்திற்கிடமான ஆளில்லா விமானம் வரும் சத்தம் கேட்டு எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னர் அந்த ட்ரோனை கைப்பற்றிய பாதுகாப்பு படை வீரர்கள் அதிலிருந்த 4 சீனத் துப்பாக்கிகளையும், 47 துப்பாக்கிக் குண்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லை வழியாக கடத்தப்பட இருந்த சீனத்துப்பாக்கிகள் குறித்து பாதுகாப்பு படையினர் தீவிர விசாரண நடத்தி வருகின்றனர்.
-நப்பசலையார்