இந்தியா

கடலோர மக்களின் வாழ்க்கை முறையை சித்தரிக்கும் வகையில் துர்கா பந்தல்.!!!

Malaimurasu Seithigal TV

மேற்கு வங்கத்தில் தசரா விழாவை முன்னிட்டு, கடலோர வாழ் மக்களின் வாழ்க்கை முறையை சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள துர்கா பூஜை பந்தல் மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

தசரா விழாவை முன்னிட்டு மக்களை கவர்ந்திழுக்கும் வகையில் பிரத்தியேக வடிவங்களில் பந்தல்கள் அமைக்கப்படும்.

அதன்படி வடக்கு 24 பர்கானா பகுதியில் கெஸ்டோபூர் என்னும் இடத்தில் கடலோரப் பகுதிவாழ் மக்களின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலும் சிறப்பூட்டும் வகையில் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டுள்ளது. இது மக்களை மிகவும் கவர்ந்து வருகிறது.