இந்தியா

இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் எதிரொலி... விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு... 

சென்னை விமான நிலையத்தில் பயணிகளை தனிமைப்படுத்தும் இடத்தில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Malaimurasu Seithigal TV

இந்தியாவில் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் நுழைந்ததை தொடர்ந்து, சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டு, அதற்கான முடிவுகள் வரும் வரை, அந்த பயணிகளை விமான நிலையத்திலேயே காத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவ்வாறு 6 மணி நேரம் தனிமைப்படுத்தப்படும் இடத்தில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என்றும், சிலர் மாஸ்க் அணியாமல் இருப்பதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காத்திருக்கும் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுகளின் விலை, அதிக கட்டணத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை விரைந்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.