இந்தியா

நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு எதிரொலி.. ஜி.எஸ்.டி. விகிதத்தை மாற்றியமைப்பது தாமதமாகும் என தகவல்

பணவீக்கம் அதிகரிப்பு எதிரொலியாக, ஜி.எஸ்.டி. விகிதத்தை மாற்றியமைப்பது தாமதமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Suaif Arsath

இந்தியாவில் 4 நிலைகளில் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படுகிறது. அதாவது 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் என 4 நிலைகளில் பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த 4 நிலைகளை மாற்றியமைக்க, அதாவது 3 நிலைகளாக குறைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதன்மூலம் சில பொருட்களின் வரி விகிதத்தை அதிகரிக்கவும், சில பொருட்களின் விகிதத்தை குறைக்கவும் திட்டமிட்டுள்ளது.

ஆனால் தற்போது நாட்டின் பணவீக்கம் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது. இதனால் இந்த ஜி.எஸ்.டி. விகித மாற்றியமைப்பு தாமதமாகும் வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.