இந்தியா

பதவியை ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா... இன்றுமாலை ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் கொடுக்கிறார்...

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா.

Malaimurasu Seithigal TV
கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து, கடந்த  2019 ஜூலை 26ம் தேதி பாஜக ஆட்சி அமைத்தது. எடியூரப்பா முதலமைச்சராக  பதவியேற்றார். இவருக்கு 78 வயதாகி விட்டதால், பாஜக கட்சியின் கொள்கைப்படி பதவியில் இருந்து விலக வேண்டும். அவரை பதவி நீக்கம் செய்யும்படி கர்நாடக பாஜக எம்எல்ஏ.க்கள், அமைச்சர்களில் ஒரு பிரிவினர் பல மாதங்களாக போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இதனால், எடியூரப்பாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை சமாளித்து இன்றுடன் தனது 2 ஆண்டு ஆட்சி காலத்தை எடியூரப்பா நிறைவு செய்கிறார்.
கடந்த வாரம் டெல்லி சென்ற எடியூரப்பா, பிரதமர் மோடி, ஒன்றிய  உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரை  சந்தித்து பேசினார். பின்னர், கட்சி மேலிடம் கேட்டுக்கொண்டால் பதவியை  ராஜினாமா செய்யப் போவதாகவும் எடியூரப்பா அறிவித்தார்.
இந்நிலையில், தனது பதவியை ராஜானாமா செய்வதாக அறிவித்துள்ளார் எடியூரப்பா. இதனால், கர்நாடகா அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.