மகாராஷ்டிராவில் சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களுடன் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் முகாமிட்டுள்ளார்.
முன்னதாக மேலவை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக சிவசேனா எம்.எல்.ஏ-கள் வாக்களித்திருந்த விவகாரம் அக்கட்சியில் பெரும் புயலை கிளப்ப தொடங்கிய உடன் தனது ஆதரவாளர்களை அழைத்துக் கொண்டு ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவை விட்டு வெளியேறினார். அவரது இந்த முடிவுக்கு கட்சியில் அவர் ஓரங்கட்டப்பட்டதே காரணம் என கூறப்படுகிறது.
மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் சிவசேனா கூட்டணி அமைத்ததில் ஷிண்டே ஏற்கெனவே அதிருப்தியில் இருந்ததாகவும், உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவாருக்கு Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தனக்கு வழங்காதது குறித்து ஷிண்டே அதிருப்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.